பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்
மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி! ஏன்?
தனக்கு எதிரான தரக்குறைவான கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'நான் மக்களவைத் தலைவரை சந்தித்து பேசினேன். என் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார்.
அவை நடவடிக்கைகள் செயல்பட வேண்டும், அவையில் விவாதம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அதானி விவகாரத்தில் டிசம்பர் 13-ஆம் தேதி விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மறுத்து வருகிறார்கள். ஆனால் நாங்கள் கடைசிவரை இதை விடமாட்டோம். இதற்காக அவர்கள் எங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். எனினும் விவாதம் வேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிக்க | வங்கிகளிடம் ரூ. 25,500 கோடி கடன் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்?
முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி, பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, சம்பித் பத்ரா ஆகியோர், காங்கிரஸ் கட்சிக்கும் ஹங்கேரி-அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவி செய்யும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி ஒரு அறிக்கையையும் காட்டினர். காங்கிரஸ் கட்சிக்கு அந்த அமைப்புகளிடமிருந்து நிதி வருவதாகக் குற்றம்சாட்டி ராகுல் காந்தியை 'துரோகி' என்று கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 'ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை அவர்கள் துரோகி என்றுதான் கூறுகின்றனர். அதனால் ராகுல் காந்தியையும் அவ்வாறு சொல்வதால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. புதிதாக இதில் ஒன்றுமில்லை. என் சகோதரர் ராகுல் காந்தியை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருக்கு இந்த நாட்டின் நலனைவிட பெரியது எதுவுமில்லை' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது!