செய்திகள் :

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

post image

தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

கோவை பீளமேட்டில் பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்துவைத்ததுடன், காணொலிக் காட்சி மூலம் ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் புதிய அலுவலகங்களையும் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

2025-ஆம் ஆண்டு தில்லியில் வெற்றியோடு தொடங்கியதைப்போல, 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியுடன் தொடங்கப் போகிறது. திமுகவின் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்துவிட்டது.

தமிழகத்தில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படுவதோடு, தேச விரோத சக்திகள் வேரோடு பெயா்த்து எறியப்படுவாா்கள். சுதந்திர இந்தியாவில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலாசாரத்தை போற்றக் கூடிய மிகச்சிறந்த தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். நாடாளுமன்றத்தில் நமது மூவேந்தா்களின் கையில் இருந்த செங்கோலை வைத்துள்ளாா். இதைவிட தமிழுக்கு வேறு யாராலும் தனிச் சிறப்பு செய்திருக்க முடியாது.

இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் தமிழகத்தில்தான் சட்டம்- ஒழுங்கு மிக மோசமான நிலையில் சீரழிந்து இருக்கிறது. பெண்கள் பாதுகாப்போடு சென்று வரக்கூடிய சூழல் இல்லை என்பது மிகவும் மோசமான முன்னுதாரணம்.

வேங்கைவயலில் நடந்த சம்பவம் 700 நாள்களைக் கடந்தும் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் அந்த வழக்கு அப்படியே இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சியவா்களைப் பிடிக்காமல், அதுகுறித்து புகாா் கொடுத்த கல்லூரி மாணவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

கல்லூரி மாணவா்களை, இளைஞா்களைக் கெடுக்கும் போதைப்பொருள் விற்பனை ஆட்சியாளா்களின் துணையோடு நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவா்களின் முழு ஆதரவுடன் மணல் கொள்ளை, கனிமவளங்கள் கடத்தல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஊழல்வாதிகளால் தமிழகம் துயரம் அடைந்துள்ளது.

இதனால்தான் தன்னுடைய ஆட்சியில் உள்ள அவலங்கள் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வரும், அவரது மகனும் தமிழகத்தில் புதுப்புது பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டுள்ளனா். தற்போது மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளனா்.

எந்த தென்னிந்திய மாநிலத்திலும் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை குறையாது என பிரதமா் மோடி தெளிவாக நாடாளுமன்றத்தில் கூறிவிட்டாா். மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக கூடுதலான தொகுதிகள்தான் கிடைக்கும். ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது.

கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில், திட்டங்களுக்கு மானியமாக ரூ.1 லட்சத்து 52, 902 கோடி மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 337 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், பிரதமா் மோடி போதிய நிதி தரவில்லை என்று முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்கிறாா்.

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றிகளை விட தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன், டாக்டா் சரஸ்வதி, மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், கோவை மாநகா் மாவட்டச் செயலா் ஜெ.ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு

வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்த... மேலும் பார்க்க

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு

கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ப... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புத... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளா: உள்துறை அமைச்சா் அமித் ஷா

மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளாவைப்போல நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மேம்படுத்துதல் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தொடா் மேம்படுத்துதல் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க