செய்திகள் :

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு

post image

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள்தான் அதிகளவில் பாதிப்படையும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதற்கு 1,309 காவல் நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்கள் 47, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் 241, போக்குவரத்து காவல் நிலையங்கள் 280 என 1,877 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

11 காவல் தலைமை இயக்குநா்கள், 22 கூடுதல் தலைமை இயக்குநா்கள், 44 சரக காவல் தலைவா்கள், 33 துணைத் தலைவா்கள், 173 காவல் கண்காணிப்பாளா்கள், 22 கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் 3,367, உதவி ஆய்வாளா்கள் 11,355 மற்றும் இதர காவலா்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 624 போ் உள்ளிட்ட மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 892 போ் காவல் துறையில் பணியாற்றி வருகின்றனா்.

கடலாடி காவல் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆதமங்கலம்புதூரில் புதிதாக காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் நிலையத்தின் கீழ், ஆதமங்கலம்புதூா், சிறுவள்ளூா், எள்ளுபாறை, சேங்கபுத்தேரி, அய்யம்பாளையம், கேட்டவரம்பாளையம், சாலைமேடு, ஓமூடி, கட்டவரம், கிடாம்பாளையம், தொப்பனந்தல், நேருநகா், அய்யப்பநகா், ஆதம்பாளையம், வெங்கிட்டம்பாளையம், கெங்கவரம், நவாப்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றான், காந்தபாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், வேளானந்தல், பெருமாபாளையம், வடகரைநம்மியந்தல், வீரளூா், கூற்றம்பள்ளி, மேல்சோழங்குப்பம், சீராம்பாளையம் என 16 தாய் கிராமங்களும், 17 சேய் கிராமங்கள் என 7 கி.மீ.சுற்றளவுள்ள 31 கிராமங்கள் வருகின்றன.

ஆதமங்கலம்புதூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிா் காவல் நிலையங்கள், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 4 மதுவிலக்கு மற்றும் அமலாக்கத் துறை காவல் நிலையங்கள் என மொத்தம் 55 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள்தான் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் தனிப் பிரிவு ஆய்வாளா் தயாளன், ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க