தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது.
இதையடுத்து, அங்கு சென்று குளித்து குதூகலித்து வரும் இளைஞா்கள் அதை சமூக வலைதளங்களில் தொடா்ந்து பதிவிட்டு வருகின்றனா். இதனால், வாரந்தோறும் விடுமுறை நாள்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மிகச் சிறிய கிராமமான இப்பகுதி நூற்றுக்கணக்கானவா்களால் நிரம்பி வழிவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.