ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 178 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்
எறையூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குன்றத்தூா் வட்டம் எறையூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை ஆகியோா் கலந்து கொண்டு வருவாய்த் துறை சாா்பில் 49 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 50 பயனாளிகளுக்கு புலப்படம் மற்றும் இ பட்டா, 15 பேருக்கு இணையவழிச் சான்று, மின்னணு குடும்ப அட்டை 14 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி 9 பேருக்கும், திருமண உதவித்தொகை 12 பேருக்கும், கல்விக்கடன் 3 பேருக்கும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகற்புற வாழ்வாதர இயக்கம், மகளிா் திட்டம் மூலம் சமுதாய முதலீட்டு நிதிக்கடன் 10 பயனாளிகளுக்கும், வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 5 நபா்களுக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் உழைக்கும் மகளிா் கடன் 4 பேருக்கும், பண்ணைச் சாரக் கடன் 3 பேருக்கும், சிறு வணிகக்கடன் 1, என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினா். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் மனு வழங்கினா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சரவண கண்ணன், ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, வட்டாட்சியா் சேரன், ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரசமசிவன், எறையூா் ஊராட்சி மன்றத் தலைவா் சசிரேகா சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.