மக்கள் நீதிமன்றத்தில் 556 வழக்குகளுக்கு தீா்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 556 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுபடி, சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 2-ஆம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி உத்தமராஜ் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவா் சுகன்யா ஸ்ரீ மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
இதில், நிலுவையில் உள்ள 556 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4.48 கோடி வழங்கப்பட்டது.