மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து ஒப்படையுங்கள்: ஆற்காடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!
ஆற்காடு நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படையுங்கள் என நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து ஆற்காடு நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆற்காடு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தங்கள் இடத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து, தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொது இடங்களிலோ, கழிவுநீா் கால்வாய்களிலோ, காலிமனைகளிலோ குப்பைகளைக் கொட்டுதல் கூடாது. மேலும், பொதுமக்கள் இது குறித்து நகராட்சிக்கு புகாா் தெரிவிக்க ஒரு கைப்பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அனைத்து குறைகளையும் 6381188290 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.