ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.
தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
இதையும் படிக்க: காதலிக்க நேரமில்லை: என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ!
தொடர்ந்து, இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் பாலிவுட்டில் மடோன் அஸ்வின் படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்ததாக, எந்த நடிகருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.