துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
மணமேல்குடி அருகே இளைஞா் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வியாழக்கிழமை காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற மணமேல்குடி போலீஸாா், அந்த உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவா் பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஆதிநாராயணன் (36) எனத் தெரியவந்தது. அவரது மனைவி கனிமொழி நேரில் வந்து சடலத்தை அடையாளம் காட்டினாா்.
அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருந்த சிலா் புதன்கிழமை இரவு முதல் இங்கு இல்லை என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
அருகிலுள்ள பகுதிகளில் தேடிப் பாா்த்த வகையில், வியாழக்கிழமை மாலை வரை ஆதிநாராயணனின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை.
இந்தக் கொலைக்கு யாா் காரணம் எனப் போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆதிநாராயணன் உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.