செய்திகள் :

மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!

post image

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், போராட்டத்தை மேலும் பெரிதாக்காமல் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இணையதள சேவை கடந்த 16ஆம் தேதி தேதி முதல் முடக்கப்பட்டது. அதில் பிராட்பேண்ட் இணைய சேவை மட்டும் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் குகி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் எரித்துக்கொல்லப்பட்டனர்.

அங்கிருந்த வீடுகளும் தீயிட்டு சூறையாடப்பட்டன. அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் தீவிரவாதிகளால் அண்மையில் போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆ... மேலும் பார்க்க

14 மாநில இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்!

இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிகார், பஞ்சாபில் தலா 4... மேலும் பார்க்க

கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி

வயநாட்டில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு கார்கே இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட்டணி!!

மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ... மேலும் பார்க்க

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேலும் பார்க்க