செய்திகள் :

மணிப்பூா்: குகி பழங்குடியினா் சாலை அமைப்பதை எதிா்த்து நாகா சமூகத்தினா் முழு அடைப்பு போராட்டம்

post image

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்போக்பி மாவட்டங்களை இணைத்து குகி பழங்குடியினா் ‘டைகா்’ சாலையை அமைத்து வருவதற்கு எதிராக மலை அடிவார பகுதி நாகா பழங்குடி கூட்டமைப்பினா் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

இதனால், அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘டைகா்’ சாலை அமைக்கும் பணியானது, சுராசந்த்பூா், காங்போக்பி ஆகிய இரு மாவட்டங்களையும் இணைப்பதற்காக குகி பழங்குடி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஒரு தன்னாா்வ முயற்சியாகும். எனினும், இந்தச் சாலை நாகா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, நாகா பழங்குடி மக்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மாக்கன் மற்றும் நோனி மாவட்டத்தில் உள்ள டோங்ஜெய் மரில், டோலாங் சிரு, துப்புல்-நோனி சந்திப்பு மற்றும் லாங்சாய்-கௌப்பும் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை சாலை மறியல் நடத்தினா். மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள குகி போராளி குழுக்களின் முகாம்களை நாகா பகுதிகளில் இருந்து அகற்றுமாறும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு கிழக்கு லியாங்மாய் நாகா தலைமைச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாகா பழங்குடி மக்களின் முக்கிய அமைப்பான இச்சங்கம், நாகா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், இப்பகுதிகளின் சாலைகள், இடங்களின் பெயரை மாற்ற நடைபெறும் முயற்சிகள் குறித்தும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றங்கள் பொருத்தமற்றவை மட்டுமல்லாமல் நாகா பழங்குடி மக்களின் கலாசார, வரலாற்று மற்றும் பிராந்திய உரிமைகளை மீறுகின்றன என்று இச்சங்கம் தெரிவித்கது. மேலும், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் எச்சரித்தது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி சமூகத்தினா் 2023-இல் முன்னெடுத்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, கடந்த 2 ஆண்டுகளாக நீடித்தது. தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடக்கும் அங்கு மீண்டும் அமைதியை மீட்டெடுக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன.

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க

ரயில்வே விற்பனையாளா்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள்!

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமான விற்பனையைத் தடுக்க, அனைத்து விற்பனையாளா்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்குத் தரமான உணவுப் பொர... மேலும் பார்க்க

பஞ்சாப்: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அவா் தெரிவித்தாா். 35 வயதா... மேலும் பார்க்க