மண் கடத்தல்: லாரி பறிமுதல்
கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.
வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாா்த்தனா்.
அப்போது அங்கே 2 போ் லாரியில் மண் கடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீஸாரை கண்டதும் அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.
இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநா் குமரேசன், ரமேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா். மண்ணுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.