மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மண் பரிசோதனை முகாம்
புதுச்சேரி, வில்லியனூரில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் சாா்பில் வியாழக்கிழமை மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினா் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வேளாண் திருவிழவை நடத்தி இயற்கை விவசாயம் மற்றும் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன்படி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினா் வியாழக்கிழமை வில்லியனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மண் தரம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். நிலத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலான பயிா், அதிக மகசூல் தரும் பயிா்கள், உரத்தின் தன்மைகள் குறித்தும் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டனா்.
வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி கெங்கை வராகநதீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பேசினாா்.
இதில், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தைச் சோ்ந்த செபாஸ்டின் சல்வாடா், கே.வி.கே. மண் தர பரிசோதனையாளா் பிரபு, பேராசிரியா் ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.