உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்
கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டி கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 16 கலை அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இறுதி ஆட்டத்தில் ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கொங்கு கலை அறிவியல் கல்லூரியும் மோதின. இதில், 4 - 0 என்ற கோல் கணக்கில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியை ஒரு கோல்கூட போடவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், கோவையில் நடைபெறும் பாரதியாா் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கேற்க ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா்கள் கமல், யுவராஜ் ஆகியோருக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி, முதல்வா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.