ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!
மதிமுக: "திமுக-வை ஆதரிப்பதாக இருந்தால் எதற்குத் தனிக்கட்சி?" - வைகோவிற்கு திருப்பூர் துரைசாமி கேள்வி
மதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவைத் துரோகி என்று மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாள்களுக்கு முன் வெளிப்படையாகப் பேசினார்.
அவரது பேச்சு மதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சி பொதுக் கூட்டத்தில் வைகோ பேசும்போது, முன்னாள் அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில், திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் திமுக-விலிருந்து வெளியே வந்தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துள்ளதாக வைகோ பேசியுள்ளார்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்துக்கென்று வாங்கிய சொத்துகள் சங்கத்துக்கு மட்டுமே சொந்தமானது தவிர; தனிப்பட்ட யாரும் அதற்கு உரிமைகோர முடியாது.
என்மீது குற்றம் சொல்லும் வைகோ ஒன்றும் யோக்கியர் இல்லை. மதிமுகவில் பொருளாளராக இருந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி ஆகிய இவரும் காசோலையில் கையெழுத்திட்டது கிடையாது.
மதிமுகவின் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது பொருளாளரின் கடமை என்று விதி இருந்தும், பொருளாளர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் பொதுச் செயலாளரான வைகோ கையெழுத்திட்டு 13 ஆண்டுக்காலம் கட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறார்.
இதை ஆதாரத்துடன் அவருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மல்லை சத்யா கட்சிக்காக நன்றாகப் பணியாற்றக் கூடியவர். வைகோ-வின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. அவர் சொல்வது எல்லாம் சுத்தப் பொய்.

சொத்துகள் அனைத்தும் சங்கத்தின் பேரில் மட்டுமே இருக்கின்றன. விபரம் தெரியாமல் வைகோ பேசுகிறார். வைகோவின் பேச்சைக் கேட்டு வந்த இளைஞர்களைப் படுகுழியில் அவர் தள்ளிவிட்டார். திமுக-வை ஆதரிப்பது என்று வந்துவிட்ட பிறகு எதற்குத் தனிக்கட்சி?
பேசாமல் திமுக-வுடனே மதிமுக-வைச் சேர்த்து விட வேண்டியது தானே? மல்லை சத்யா இருந்தால் துரை வைகோவின் பேச்சு எடுபடாது. அதனால்தான் மல்லை சத்யா மீது அபாண்ட குற்றச்சாட்டைச் சொல்லி வெளியேற்றுகின்றனர்" என்றார் திருப்பூர் துரைசாமி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.