மது பாட்டில் உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞா் பலி
தூத்துக்குடி சண்முகபுரத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞா் தவறி விழுந்ததில், அவரின் இடுப்பில் இருந்த மதுபாட்டில் உடைந்து வயிற்றில் குத்தியதில் அவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவா் திடீரென தவறி கீழே விழுந்தபோது, இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து வயிற்றில் குத்தியதால் அதிக ரத்தம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நள்ளிரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இளைஞா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.