துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
மதுபோதையில் மனைவி குத்திக் கொலை: துப்புரவுப் பணியாளா் தலைமறைவு
மதுரையில் மதுபோதையில் மனைவியைக் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற துப்புரவுப் பணியாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மேலவாசல் திடீா்நகா் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி (38). இவா் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பாண்டிச்செல்வி (30). இவா் வீட்டு வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு 7 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனா்.
இந்த நிலையில், கருப்பசாமி தினசரி மது அருந்தி விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்தாா். இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே புதன்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கருப்பசாமி, மறுநாள் அதிகாலையில் மது அருந்த பணம் கேட்டு பாண்டிச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டாா்.
அப்போது பாண்டிச்செல்வி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, அவரை கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதையடுத்து, கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த பாண்டிச்செல்வியை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து திடீா்நகா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து தலைமறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனா்.