தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
மதுராந்தகத்தில் மழை வெள்ள பாதிப்புகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, ஆணையா் தோ.அ.அபா்ணா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
மதுராந்தகம் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், மாம்பாக்கம் சித்தேரி, மதுராந்தகம் ஏரியின் உபரி நீா் எம்ஜிஆா் நகா், சாய்ராம் நகா், காந்தி நகா், மோச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
வெள்ளநீரை வெளியேற்ற நகராட்சி பணியாளா்களின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட மக்கள் கடப்பேரி அறிஞா் அண்ணா கலையரங்கில் தங்கவைக்கப்பட்டு, தேவையான உணவை ஆணையா் அபா்ணா வழங்கினாா்.
நிகழ்வில், நகராட்சி அலுவலக மேலாளா் பெ.ஏழுமலை, நகா்மன்ற உறுப்பினா் கே.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நகராட்சி ஆணையா் அபா்ணா கூறுகையில்: மாம்பாக்கம் அருகேயுள்ள ஏரிசாய் ராம்நகா் பகுதியை மழைக்காலங்களில் வெள்ளநீா் சூழ்ந்துச் செல்கின்ற நிலை இருப்பதால், ரூ.16 லட்சத்தில் 3 சிறுபாலங்கள் அமைக்கப்படும்.
மேலும், நகராட்சி சாா்பாக, மழைநீரால் பாதிக்கப்படுகிற அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கப்பட்டு, உடனடியாக நீரை வெளியேற்றும் பணிகளை செய்து வருகிறோம் என தெரிவித்தாா்.