செய்திகள் :

மதுரை: பொய்கைகரைப்பட்டியில் மகா பெரியவருக்கு உருவாகும் ஆலயம்..!

post image

காஞ்சி மகா பெரியவர் என பக்தர்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, மதுரை அழகர்கோயில் அருகே பொய்கைகரைப் பட்டியில் கோயில் கட்டும்பணி தொடங்கியுள்ளது.

அழகர் மலை

சூட்சமமான இந்து ஆன்மீக தந்துவத்தின் மெய்பொருளை எளியவர்களும் புரியும்வண்ணம் அருளிய காஞ்சி மகான் என்று அழைக்கப்பட்ட மகா பெரிவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மதுரையில் ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது.

இந்நிலையில் கோயில் கட்டும் பணிக்காக நிலம் வாங்கி அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இத்திருப்பணியை முன்னெடுத்துள்ள மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தெரிவிக்கும்போது, "மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம், உள்ளிட்ட பல வைபவங்களுக்காக காஞ்சி மகா பெரியவர் மதுரைக்கு பலமுறை விஜயம் புரிந்துள்ளார். அவருக்கு 'திருமாலிருஞ்சோலை' என்னும் கள்ளழகர் கோயில் பொய்கைகரைப்பட்டியில் மலை அடிவாரத்தில் திருக்கோயில் கட்டும் பணியை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

காஞ்சி மகா பெரியவர்

இதற்கான பூர்வாங்க பணிகள் பொய்கைகரைப்பட்டியில் தொடங்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

`என்னதான் ஆறுதல் சொன்னாலும் உதயகுமாரை..!’ - உயிரிழந்த பாகரைத் தேடும் திருச்செந்தூர் கோயில் யானை

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 18-ம் தேதி உதவி யானை பாகர் உதயகுமார், அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோரை தாக்கியதில் ... மேலும் பார்க்க

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு; திருவண்ணாமலையில் அரச இலை தீப வழிபாடு

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூ... மேலும் பார்க்க

துதிக்கையில் முத்தம்; செல்போனில் செல்ஃபி - திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியது எப்படி?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யான... மேலும் பார்க்க

'அசாம் டு திருச்செந்தூர்' - கோயில் யானை தெய்வானையின் பின்கதை!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க