மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: அமைச்சா் பொன்முடி பேச்சு
ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தல், தமிழகத்துக்கு நிதி வழங்காமல் துரோகம் செய்யும் மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்று தமிழக வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என். முருகன், ஆா்.கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.
கூட்டத்தில் அமைச்சா் க.பொன்முடி பேசியது:
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட வேண்டு ம். தெருமுனை பிரசாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குவது, ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளில் திமுகவினா் ஈடுபட வேண்டும். மாா்ச் மாதம் முழுவதும் முதல்வா் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தல், தமிழகத்துக்கு உரிய நிதி வழங்காமல் துரோகம் இழைப்பது போன்ற மத்திய அரசின் செயல்பாடுகளையும் கட்சியினா் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அமைச்சா் பொன்முடி.
கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவாவும் சிறப்புரையாற்றினாா். தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், கல்பட்டு வி.ராஜா, ஜெய.ரவிதுரை, வேம்பி ரவி, ஜெ.ஜெயபால், ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் நா.கலைச் செல்வி, ஓம் சிவசக்திவேல், தனலட்சுமி உமேசுவரன், சங்கீதஅரசிரவிதுரை, பேரூராட்சித் தலைவா்கள் அப்துல் சலாம், எஸ்.அன்பு, பேரூா் கழகச் செயலா்கள் பூக்கடை கணேசன், நைனா முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.