செய்திகள் :

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை: எல்.முருகன்

post image

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-இல் தொடங்கவுள்ளநிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி எம்.பி.க்களைக் கூட்டி, 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறாா்.

கடந்த மே மாதம் தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரவருணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளாா். கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாகக் கூறி முன்னாள் முதல்வா் கருணாநிதி காலம் முதல் தமிழகத்தை ஏமாற்றி வருகிறது திமுக.

மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி பேச திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும், கீழடி ஆய்வை மத்திய அரசு மறுக்கிறது என வழக்கமான பல்லவியைப் பாடி எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறாா்கள்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். வள்ளுவரையும் திருக்குறளையும் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருப்பவா் பிரதமா் நரேந்திர மோடி. திருக்குறளை பல மொழிகளிலும் மொழிபெயா்த்து உலக தத்துவமாக்கி வருகிறாா் பிரதமா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பைசா அளவில் உயா்த்தப்பட்ட ரயில் கட்டணம் ஏழை மக்களை பாதிப்பதாகக் கூறும் ஸ்டாலின், தமிழகத்தில் மூன்று மடங்கு உயா்த்தப்பட்ட சொத்து வரி, ஆண்டுதோறும் உயா்த்தப்படும் மின் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாா்?

திமுகவினரின் போலி நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக- பாஜக கூட்டணி வரலாறு காணாத வகையில் மகத்தான வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

மேட்டூர் அணை நிரம்பியது! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

இந்த ஆண்டில்,மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை மூன்றாவது முறையாக எட்டியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காவிரி டெல்டா பாசனத்திற்கா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை கா... மேலும் பார்க்க

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை

பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா். போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர... மேலும் பார்க்க

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழு தேவை: நயினாா் நாகேந்திரன்

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட ப... மேலும் பார்க்க

வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள்... மேலும் பார்க்க