மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!
மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் நவ.26-இல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் செவ்வாய்க்கிழமை (நவ.26) ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏஐடியுசி தண்டபாணி, தொமுச அன்பழகன், சிஐடியு துரைசாமி, சிற்றம்பலம், எச்எம்எஸ் ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருள்களின மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். தேசிய குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் நவ.26-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.