சென்னை ஃபைல்ஸ் - முதல்பக்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !
மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓடையில் மிசாஜி ராய்க்வார்(35) சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் அவரின் உடைகள் மற்றும் மீன்பிடி வலை ஓடையின் கரையில் காணப்பட்டதாகவும், இருப்பினும் அவர் பற்றிய எந்த தடயமும் இல்லை என்றும் உள்ளூர்வாசி அசோக் ராய்க்வார் தெரிவித்தார்.
போலீஸாரும் கிராம மக்களும் இரவு முழுவதும் ராய்க்வாரை தேடினர். ஞாயிற்றுக்கிழமை காலை கென் ஆற்றில் அவரது உடலின் மேல் பகுதி மிதப்பதைக் கண்டனர். உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜ்நகர் சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை அதிகாரி நிலேஷ் பிரஜாபதி கூறுகையில், ராய்க்வாரை முதலை பகுதியளவு தின்றுவிட்டது போல் தெரிகிறது.
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இறுதிச் சடங்கிற்கான நிதி உதவி உடனடியாக வழங்கப்பட்டது. கூராய்வு அறிக்கை கிடைத்தவுடன், இழப்பீடு மூன்று நாள்களுக்குள் குடும்பத்தினரின் கணக்கிற்கு மாற்றப்படும். மழைக்காலங்களில் நீர்நிலைகளுக்குச் செல்வதை குடியிருப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
இதனிடையே அப்பகுதியில் ஒரு பெரிய முதலையை கிராம மக்கள் சனிக்கிழமை கண்டதாக தெரிவித்தனர். இது தாக்குதலின் சந்தேகத்தை மேலும் எழுப்பியது. முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி, டாமோ மாவட்டத்தில் 40 வயது பெண் ஒருவர் முதலையால் கொல்லப்பட்டார். அவர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தபோது முதலை அவரைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.