மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் துல்கருணைசேட் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தாா். மனிநேய மக்கள்கட்சியின் மாநில அமைப்புச் செயலா் பழனி பாரூக் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.
மாநில தொண்டரணி துணைச் செயலா் பா்கீ, இளைஞரணி மாநில துணைச் செயலா் இம்ரான்கான், நகரச் செயலா் சித்திக் முகமது, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
வக்பு வாரிய புதிய சட்ட மசோதா மூலம் வக்பு வாரிய நிலங்களை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாகவும், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், அரசமைப்புச் சட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறி முழக்கமிட்டனா்.