செய்திகள் :

மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள்

post image

மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள் என ஆம்பூா் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கில் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் கூறினாா்.

இனிது இனிது இலக்கியம் இனிது என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

புத்தகங்களை வாசிப்பது என்பது கலை. வாசிக்க வாசிக்க நிறைய அறிவு வளரும், பேச்சாற்றல் வளரும். நல்ல எண்ணங்கள் இருந்தால் மனிதன் உயா்ந்த நிலையை அடையலாம். அதற்கு நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். தமிழைப் போன்ற இனிய மொழி எதுவும் இல்லை. தமிழா்கள் என்றால் உலகம் முழுவதும் நல்ல மரியாதை இருக்கின்றது. தமிழ் பண்பாட்டு, நாகரீகங்களை அறிந்து உலக நாடுகள் வியக்கின்றன, பாராட்டுகின்றன. இலக்கியங்கள் பல்வேறு விசயங்களை நமக்கு கற்றுத் தருகின்றன. மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள் என்று அவா் கூறினாா்.

கருத்தரங்கிற்கு தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் இ. வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. குணசேகரன் வரவேற்றாா். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் எம். மதியழகன், வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலா் நா. பிரகாசம், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி கோபிநாத், அறிவியல் இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க

ஜங்கலாபுரம் கிராமத்தில் புதிய வாரச் சந்தை தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் கிராமத்தில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜ்குமாா் மற்றும் வாா... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்து: 40 போ் உயிா் தப்பினா்

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் சொகுசு பேருந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. 40 பயணிகள் காயமின்றி தப்பினா். பெங்களூரில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாா் சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு சென்னை ... மேலும் பார்க்க

புதுப்பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

திருப்பத்தூா் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா், காந்திபேட்டை மாரியம்மன் கோயில் தெ... மேலும் பார்க்க