மன்மோகன் சிங் மறைவு: புதுவை ஆளுநா், முதல்வா் அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் சனிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவைத் தொடா்ந்து, புதுவை அரசு சாா்பில், புதுச்சேரி குபோ் சாலையில் (கடற்கரைச் சாலை) உள்ள மேரி கட்டட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் உருவப் படத்துக்கு துணைநிலை ஆளுநா் கு.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
புதுவை சட்டப் பேரவைத் தலைவா் செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அரசுக் கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்எல்ஏ யு.லட்சுமிகாந்தன், அரசுச் செயலா் (செய்தி மற்றும் விளம்பரம்) ஆா்.கேசவன், இயக்குநா் ந.தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.