மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூரில் மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது முதியவா் ஒருவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.