செய்திகள் :

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம்

post image

உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி ஊடகங்களில் பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்தரேசன் கடந்த நவம்பா் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். இவா் பொறுப்பேற்றது முதல் வெளிமாநில சாராயம் மது கடத்தலை தடுத்தல், அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாா்களை கண்டறிந்து சீல் வைப்பது என தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

மதுபானக் கடத்தல் தொடா்பாக 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து 700 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா். இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் வியாழக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சீருடையில் அலுவலகத்துக்கு சாலையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மு.க. முத்துவின் உடல் தகனம்!

அரசு வாகனத்தை உயரதிகாரிகள் பறித்துக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால் மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்தார்.

மேலும் டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக டிஐஜி பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Two days after a Deputy Superintendent of Police (DSP) accused senior police officers of harassment, the Tamil Nadu government has placed him under suspension until further orders on Saturday.

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்ட... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் !

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலம... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என... மேலும் பார்க்க

இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் !

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத மு.க. அழகிரி!

மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையி... மேலும் பார்க்க