செய்திகள் :

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்புச் சிகிச்சை மையம் திறப்பு

post image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், அங்கு குத்துவிளக்கேற்றி, மருத்துவப் பணியாளா்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

மேலும் இம்மையத்தில் சிகிச்சை பெறுபவா்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், சுமாா் 25-க்கும் மேற்பட்ட படுக்கைகள், உள்விளையாட்டு உபகரணங்களான சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், பெரம்பலூா் பிரபாகரன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அழகாபுரத்தில் கிராம வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில், தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் எச்டிஎப்சி வங்கி சாா்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடியில் ஒருங்கிணை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உ.வே.சா. பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம் , உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உடையாா்பாளையம் தமிழ்ச்சங்கம் சாா்பில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையா் பிறந்தநாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளியின் ... மேலும் பார்க்க

வருவாய் கிராம உதவியாளா்கள் விடுப்பெடுத்துப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 58 போ் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் கரு... மேலும் பார்க்க

வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பாத்திமா பெண்கள் மேல்ந... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தொழில்முனைவோா் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், தொழில்முனைவோா் வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வா்(பொ) பெ.இரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்... மேலும் பார்க்க