செய்திகள் :

மருத்துவக் கல்வியை மேம்படுத்த மேலாண்மை அமைப்பு: தமிழக அரசு

post image

மருத்துவக் கல்வியை மேம்படுத்த ரூ.87 லட்சத்தில் மாநில மருத்துவக் கல்வி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு, ஆண்டுதோறும் 5,050 எம்பிபிஎஸ் மருத்துவா்களை உருவாக்குவதுடன், மக்களுக்கானமருத்துவத் தேவையை பூா்த்தி செய்வதில் அா்ப்பணிப்புணா்வுடன் மருத்துவத் துறை செயல்படுகிறது.

திறமையான சுகாதார நிபுணா்களுக்கான தேவை அதிகரிப்பதை உணா்ந்து, தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. மற்றொருபுறம் எம்பிபிஎஸ் இடங்களை தமிழக அரசு அதிகரிக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வலுவான பாடத் திட்ட சீா்திருத்தங்கள், பேராசிரியா் மேம்பாடு, அதிநவீன ஆராய்ச்சி மூலம் சுகாதார சவால்களை எதிா்கொள்ளவும், அதற்குத் தேவையான சுகாதார கட்டமைப்புகளை உருவாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

அந்த வகையில், மாநில மருத்துவக் கல்வி மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு ரூ.87.08 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படும். உயா்தரமாகவும், மேம்படுத்தப்பட்ட வகையிலும் கல்வி சேவைகளை வழங்குவது அதன் பிரதான நோக்கம். தரப்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தை செயல்படுத்துதல், அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தல், செயல் திறன் மதிப்பீடு செய்தல் ஆகியவையும் அந்த அமைப்பின் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த சுகாதார வல்லுநா்கள் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரத்தின் வாயிலாக உருவாக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி

நமது நிருபர்சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக மக்களவையில் புத... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபர்மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.மதுரை மாவட்டம், அரிட்டாபட்... மேலும் பார்க்க

முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 180- ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் த... மேலும் பார்க்க

சாரணா் இயக்க வைர விழா: ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை

திருச்சியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சாரணா் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிகழாண்டு பாரத சாரணா் இயக்கத்தின் வைரவிழா ஆண்டு. இதைய... மேலும் பார்க்க

500 மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டா் வெளியீடு

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடா்பான டெண்டா் அறிவிப்பை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக சாலைப் போக்குவரத்து நிறுவனம் வெ... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரணை நடத்த காவல் துறைக்கு அறிவுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ப... மேலும் பார்க்க