மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முசிறி ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (55). இவா் டிச. 9 ஆம் தேதி தனது மனைவியை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து திரும்பியபோது மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக தொட்டியம் கோட்டைமேடு பகவதி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த சுப்ரமணியன் மகன் விஜய் (25) என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.