செய்திகள் :

மருத்துவமனையில் இறந்த கணவன்; ரத்தக் கறையை சுத்தம் செய்த கர்ப்பிணி; வெளியான அதிர்ச்சி வீடியோ!

post image

மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டம், பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கிராமம் லால்பூர். இந்த கிராமத்தில் வசித்த சிவராஜ் என்பவருக்கும் அவரின் மற்ற இரண்டு சகோதரர்கள், தந்தைக்கு மத்தியில் சொத்து தொடர்பான பிரச்னை இருந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அந்த சண்டையில் கைகலப்பு ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடும் நடத்திக்கொண்டதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சிவராஜின் தந்தையும், ஒரு சகோதரரும் உயிரிழந்திருக்கின்றனர். சிவராஜ், அவரின் சகோதரர் ராம்ராஜ் ஆகியோர் கடும் காயங்களுடன் கடசரை பகுதி சுகாதார மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி ரோஷ்னி, கணவன் உயிரைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிவந்திருக்கிறார். இந்த நிலையில், சிவராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவனை இழந்து நிற்கதியாக நின்ற அந்த ஐந்து மாத கர்ப்பிணியிடம் சிவராஜ் படுத்திருந்த படுக்கையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. அதனால், கணவனை இழந்த துக்கத்தில் இருக்கும் ரோஷ்னி, அந்தப் படுக்கையை சுத்தம் செய்து அந்த குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் மருத்துவமனை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், ``அந்தப் பெண்ணிடம் யாரும் சுத்தம்செய்யக் கூறவில்லை. இறந்தவரின் மனைவி படுக்கையில் இருந்து ரத்தத்தை ஒரு துணியால் துடைக்க அனுமதிக்குமாறு எங்களிடம் கேட்டார், அவர் அதை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் எனக் கருதி அனுமதித்தோம். நாங்களாகவே அவரை படுக்கையை சுத்தம் செய்யும்படி கேட்கவில்லை." என விளக்கமளித்திருக்கிறது. இந்த விளக்கமும் நம்பும்படியாக இல்லை என சமூக வலைதளங்களில் மீண்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க