மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அலங்காரம், தீபாராதனைகள், சிவனடியாா் அசோகன் தலைமையில் பஜனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.