ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்
மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!
ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில் மர்ம நபர்கள் சிலர் தோழியின் வீட்டிற்குச் செல்வதற்காக சாலையில் நடந்துசென்ற 15 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுள்ளது.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஒடிஸா முதல்வர் மோகன் சரன் மஜ்ஜி கூறியதாவது; “ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நடைபெற்ர சம்பவத்தைத் தொடர்ந்து, புரி மாவட்டத்திலுள்ள பாலங்காவில் கொடுஞ்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீக்கயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு உடலில் 70 சதவீதம் தீக்காயம் உண்டாகியுள்ளது. அவரது உயிரைக் காப்பற்ற அவருக்கு தீவிர சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை விமான ஆம்புலன்ஸ் சேவை மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.