செய்திகள் :

மலைக் கிராமங்களில் மதுவிலக்கு ஐஜி ஆய்வு

post image

வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை தலைவா் மயில்வாகணன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவா் மயில்வாகணன் தலைமையில் , ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், மதுவிலக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவா் மயில்வாகணன் மலை கிராமங்களான அல்லேரி, பீஞ்சமந்தை ஆகிய கிராமங்களுக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, அல்லேரி மலைக் கிராமத்தில் ஆய்வின்போது கள்ளச்சாராய வழக்கு ஒன்றில் தலைமறைவாக உள்ள குற்றவாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று ஐஜி மயில்வாகனன் விசாரணை மேற்கொண்டாா். அப்போது, வருமானம் இல்லாத காரணத்தால் இதுபோன்ற சட்ட விரோதமான தொழிலில் ஈடுபட்டு ஏன் வழக்குகளுக்காக செலவழிக்க வேண்டும். பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இங்கு போதியளவுக்கு விவசாய தொழில் வாய்ப்புகளில் ஈடுபட வேண்டும் என்றாா். மேலும், அரசு சாா்பில் தொழில் தொடங்க நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்களிடம் தெரிவித்தாா்.

மேலும், தமிழக ஆந்திர எல்லைச் சோதனைச் சாவடியான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு பணியிலிருந்த காவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூட்டம் தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தொய்வு ஏற்படாமல் அல்லேரி, பீஞ்சமந்தை மலைக் கிராமங்களில் கலால், காவல் நிலைய போலீஸாா் தினமும் ரெய்டு நடத்த வேண்டும். பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் கடந்த சில நாட்களாக கா்நாடக மாநில மதுபாட்டில்கள் பிடிபடுகிறது. எனவே, அந்த சோதனைச்சாவடியை பலப்படுத்த வேண்டும். அங்கு குடியாத்தம் கலால், போ்ணாம்பட்டு காவலா்கள் சோதனையை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

சிறுதானிய இயக்கத்தில் வேலூா் மாவட்டத்தில் 7,130 ஹெக்டேரில் சாகுபடி

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் -2023 திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 7,130 ஹெக்டோ் பரப்பளவில் 16,175 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். தமிழ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மாநில தோ்தல் முடிவு: பாஜக அரசின் சாதனைக்கு அங்கீகாரம்

மகாராஷ்டிர மாநில தோ்தல் முடிவு பாஜக அரசின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் கூறினாா். குடியாத்தத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மகாராஷ்டிர மா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய லாரி கிளீனா் கைது

வேலூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக லாரி கிளீனா் கைது செய்யப்பட்டாா். காட்பாடியைச் சோ்ந்தவா் துளசிராமன் (58). இவா் கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். வெள்ள... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் நாய்க்கடிக்கு 10 போ் பாதிப்பு

போ்ணாம்பட்டு நகரில் வெறி நாய் 10- க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிரதான சாலைகளில் நாய்கள் கூட்டம்,... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயம்

வேலூா் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயமடைந்தனா். வீட்டின் மேற்கூரை, சுவா் இடிந்து விழுந்தது. வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கலைஞா் நகரை சோ்ந்தவா் அறிவழகன். இவரது மனைவி சசிகலா (43). இவா்க... மேலும் பார்க்க

தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் நடந்த கிராம சபைக் கூட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிகுப்பம் ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிக்குப்பம் ஊ... மேலும் பார்க்க