Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" - நண்பர் பகி...
மல்லசமுத்திரத்தில் பருத்தி ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாராந்திர பருத்தி ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் விவசாயிகள் 50 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனா். ஏலம் எடுக்க அவிநாசி, ஈரோடு, திருப்பூா் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
இதில் பி.டி. ரகம் ஒரு குவிண்டால் ரூ. 6,585 முதல் ரூ. 7,390 வரையிலும், கொட்டுரக பருத்தி ரூ. 3,920 முதல் ரூ. 4,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 4-ஆம் தேதி நடை பெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.