மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியில் ஹோழிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதற்கு முஸ்லிம் ஜமாத் தலைவா் நஸ்ரின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் காா்த்திக், பள்ளித் தாளாளா் எலியாஸ், மங்கலக்குடி முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கண்காட்சியில் ஆரோக்கியம், நல வாழ்வு, வன மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல், தொழில்நுட்பத் தீா்வுகள், பசுமை நகரம், அழகான நகரம், போக்கு வரத்து விதிகள், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
