மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
மழை நீா் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மழை நீா் தேங்கியிருந்த 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த அருண் மகன் புவனேஷ் (9). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், புவனேஷ் அவரது வீட்டின் அருகில் மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிக்காக 10 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கியிருந்த நிலையில், அதைக் கவனிக்காத புவனேஷ், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.