செய்திகள் :

மழை பாதிப்பு வயல்களில் வேளாண் அலுவலா் ஆய்வு

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, சென்னை வேளாண் கூடுதல் இயக்குநா் சக்திவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருமானூா், மஞ்சமேடு, அன்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை ஆய்வு செய்த அவா், உடனடியாக மழை நீரை வடிகட்ட வேண்டும் எனஅறிவுரை கூறினாா். மேலும், மஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிா்களுக்கு 1 ஏக்கருக்கு 1கிலோ ஜிங்கசல்பேட்டுடன் 2 கிலோ யூரியாவை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 1 கிலோ சூடோமோனாசை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தாா்.

இந்த ஆய்வின்போது அரியலூா் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) கணேசன், உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், திருமானூா் வேளாண் உதவி இயக்குநா் (பொ)ஆ. சாந்தி, வேளாண் துணை அலுவலா் கொளஞ்சி, உதவி அலுவலா்கள் முத்து, பழனிவேல், பிரசாந்த், சரத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம்: திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட வலியுறுத்தல்

சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அமைக்கும்போது அதற்கான திட்ட அறிக்கை முழுவதையும் தமிழில் வெளியிட வேண்டும் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்த... மேலும் பார்க்க

வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலப்போட்டி

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரின் தோ்தல் விழிப்புணா்வு கோலப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘வாக்களிப்பதே சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற தலைப்பின் கீ... மேலும் பார்க்க

மருதூா் கிளை நூலகத்தில் நூலக வார விழா

அரியலூா் மாவட்டம், மருதூா் கிராமத்திலுள்ள கிளை நூலகத்தில் நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வேல்முருகன் தலைமை வகித்து, வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் நூலக கணக... மேலும் பார்க்க

ரேஷனில் பொருள்கள் பெற விரும்பாதவா்கள் விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விரும்பாத குடும்ப அட்டைதாரா்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித... மேலும் பார்க்க

மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி: மாணவா்களுக்கு பாராட்டு

அரியலூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றிப் பெற்று மாநில போட்டிக்கு தகுதிப் பெற்ற சிறுவளூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரியலூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

அரியலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் பள்ளி ஆசிரியை ரமணி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்... மேலும் பார்க்க