மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார்: முதல்வர் ஸ்டாலின்
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களுக்கு அதி மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார். மழை பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் செல்கிறார். நெல்லைக்கு அமைச்சர் கே.என். நேரு சென்று வந்துள்ளார், திரும்பவும் நெல்லைக்கு செல்லவுள்ளார்.
ஏரிகளில் நீர் திறப்புக்கு முன்னர், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.