செய்திகள் :

மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை! - மின்சாரத் துறை அறிவுறுத்தல்

post image

மழைக் காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(நவ. 29) பிற்பகல் ஃபென்ஜால் புயலாக உருவாகியுள்ளது.

இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி பிற்பகல் புயலாக கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக் காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதையும் படிக்க | கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவானது எப்படி? - தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி!

ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

வீட்டில் மின் சுவிட்சுகைள் 'ஆன்' செய்யும்போது கவனத்துடன் இயக்கவும்.

வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.

வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.

மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லாக் (Pitar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

சாலைகளிலும். தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா ஓடுவேதா விளையாடுவேதா மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.

தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.

மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.

மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஃபென்ஜால் புயல் நாளை எப்போது கரையைக் கடக்கும்?

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வட... மேலும் பார்க்க

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஃபெங்ஜால் புயல், நாளை பிற்ப... மேலும் பார்க்க

ஜாமா மசூதி ஆய்வு- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தொல்.திருமாவளவன் கடிதம்

ஜாமா மசூதி ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.“உத்தரப்பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜா... மேலும் பார்க்க

இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை சென்னைக்கும் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நவ.29(இன்று):... மேலும் பார்க்க

சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் மழைத் தொடங்கப்போகிறது, மாலை அல்லது இரவிலிருந்து மழை தீவிரமடையும். ஆனால் பரவலாக கனமழை பெய்யும் என சொல்லிவிட முடியாது என்று தமிழ்நாட... மேலும் பார்க்க

தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கவனத்துக்கு: பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புயலாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான புயல் ... மேலும் பார்க்க