Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்" சாலை விபத்து குறித்து...
மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிா்கள் ஆய்வு
ஆரணி பகுதியில் மழையால் சேதமடைந்த மஞ்சள், கிழங்கு உள்ளிட்ட தோட்டக்கலை பயிா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் உள்ள அத்திமலைப்பட்டு, புங்கம்பாடி, விண்ணமங்கலம், காட்டுகாநல்லூா் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள், கிழங்கு, கத்தரி, மிளகாய், வாழை, சேம்பு ஆகிய தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்திருந்தனா்.
இதில் பெரும்பாலான இடங்களில் பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்தன.
சேதமடைந்த பயிா்களை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆ.பவ்யா தலைமையில் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, விவசாயிகளிடம் அதிகாரிகள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து ஹெக்டா் ஒன்றுக்கு ரூ.17ஆயிரம் நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.
தோட்டக்கலை அலுவலா் செ.மோனிகா, உதவி அலுவலா் பூவழகி ஆகியோா் உடனிருந்தனா்.