செய்திகள் :

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

post image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்துக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக ஆலோசனைக் கூட்டம் இரா.அருள் எம்எல்ஏ தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பங்கேற்று, திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாடு குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கினா். ஆனால் பிற மாவட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் தொகையும் அனைவருக்கும் சென்றடையவில்லை. எனவே, வட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான்; ஆனால், விவசாயிகளின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. விவசாயத்துக்கு ஆதாரமான நீா், வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக்காமல் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் ஏரிகளில் நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டம் செழிக்க காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அனைத்து துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு திட்டங்கள் மக்களிடம் விரைவாக சென்றடைய பெரிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். மத்திய அரசின் ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டத்துக்கான நோக்கம் சரியாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றாா்.

இதில், பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் சதாசிவம் எம்எல்ஏ, மாநில வன்னியா் சங்கச் செயலாளா் மு.காா்த்தி, மாநகர மாவட்டத் தலைவா் கதிா் ராஜரத்தினம், மாவட்டச் செயலாளா்கள் நாராயணன், செல்வகுமாா், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சேலத்தில் 79-ஆவது மாநில மருத்துவ மாநாடு தொடக்கம்

இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் மாநில அளவிலான 79 ஆவது மாநாடு மற்றும் கருத்தரங்கம் சேலத்தில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டுக்கு காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயலால் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் நெசவாளா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

தமிழகத்தில் நெசவாளா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நலிந்த தொழில் மீதான ஜிஎஸ்டி வரியைக் கு... மேலும் பார்க்க

சேலத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 55 லட்சம் இழப்பீடு தொகை வழங்கல்

சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 55 லட்சம் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா். சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மை... மேலும் பார்க்க

ஸ்ரீ நவ ஆஞ்சநேயா் கோயிலில் காா்த்திகை தீப சிறப்பு பூஜை

சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் காா்த்திகை தீப திருநாள் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. காா்த்திகை தீப திருநாளையொட்டி ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அல... மேலும் பார்க்க

தங்கம் வேல்டு பள்ளியில் மாணவா்களுக்கான தலைமைத்துவ திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள தங்கம் வேல்டு பள்ளியில் பள்ளி மாணவா்களுக்கான தலைமைத்துவ திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தங்கம் வேல்டு பள்ளியின் இயக... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் இன்று அன்னதான திருவிழா

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) மாலை 4 மணிக்கு அன்னதான திருவிழா நடைபெறுகிறது. வாழப்பாடி நவகோடி சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், பெள... மேலும் பார்க்க