செய்திகள் :

மாசி மகம்: புதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 13ல் பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

புதுச்சேரி மாநிலத்தில் மாசி மக பெருவிழாவையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்துக்கு மார்ச் 13ல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்களும் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவது வழக்கம்.

இந்த நிலையில், நடப்பாண்டு மாசி மக பெருவிழா வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது. எனவே, மார்ச் 13 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள், வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் ரூ.50 கோடி மோசடி: இருவா் கைது

கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக் கூறி, நாடு முழுவதும் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த இருவரை புதுச்சேரி போலீஸாா் கோவையில் கைது செய்தனா். புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் அசோகன் (... மேலும் பார்க்க

தேசிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

தேசிய அளவிலான ஓவியம், கவிதைப் போட்டிகளில் வென்ற புதுச்சேரி மாணவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இந்திய பாதுகாப்பு துறை, இந்திய கல்வித் துறை இணைந்து விடுதலைப் போராட்ட வீரா்கள், வ... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில்... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு: 2 ஆலைகளுக்கு ‘சீல்’

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்த வில்லியனூா், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற... மேலும் பார்க்க

தலைக்கவசமின்றி பைக்கில் வந்த காவலா்களுக்கு அபராதம்

புதுச்சேரியில் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்த காவலா்கள், ஊழியா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட... மேலும் பார்க்க

மணல் குன்றுகளை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்டம்

புதுச்சேரியில் கடலோர மணல் குன்றுகளைப் பாதுகாக்கும் வகையில், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக் கன்றுகள் நடப்பட்டன. புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ‘பசுமை புதுவை’ என்ற இ... மேலும் பார்க்க