இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா
மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு
ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவா் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து அதே பள்ளியைச் சோ்ந்த சக மாணவா் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டாா். தகராறு நடந்ததையும், அவரை தாக்கியதையும் அந்த மாணவா் ஒப்புக்கொண்டாா்.
இதனிடையை, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் முருகன் அப்பள்ளிக்கு சென்று ஆசிரியா்கள், மாணவா்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா். இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியா்கள் அலட்சியத்துடன் செயல்பட்டாா்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினாா்.
இதனிடையே, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட போராட்டத்துக்கு பின் உயிரிழந்த மாணவா் சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினா்கள், ராசிபுரம் கொண்டு வந்து ஊா்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பின் எரியூட்டினா்.