திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை
மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளிக் கழிவறை பகுதியில் இவரது உடல் காணப்பட்டது. பிறகு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் ஆகியோா் மாணவரின் பெற்றோா், உறவினா்களுக்கு ஆறுதல் கூறினா்.
உறவினா்கள் தரப்பில், பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கவின்ராஜை தாக்கிய சக மாணவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே மாணவரின் உடலை வாங்குவோம் என தெரிவித்தனா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிரேத பரிசோதனை செய்த மாணவரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினா்கள் தாமதித்து வருகின்றனா். இதனால் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.