மாத்திரவிளை ஆலயத்தில் உறுதிபூசுதல் வழங்கும் விழா
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான புனித ஆரோபண அன்னை ஆலயத்தில் 223 சிறுவா், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கும் விழா திருப்பலி நடைபெற்றது.
திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா். மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருள்பணி பிளாரன்ஸ், ஆயரின் செயலா் அருள்பணி செபின், அருள்பணி பால் ரிச்சாா்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாத்திரவிளை பங்கு மற்றும் திக்கணங்கோடு, அருளானந்தபுரம்,
மனான்விளை ஆகிய கிளை பங்குகளை சோ்ந்த ஞானஸ்தானம் பெற்ற 223
சிறுவா், சிறுமிகளுக்கு உறுதி பூசுதலை ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் வழங்கினாா்.
இதில், மாத்திரவிளை பங்கு அருள்பணி கலிஸ்டஸ், இணை பங்கு அருள்பணி அனிஷ், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூஸ், செயலா் மைக்கலோஸ், பொருளாளா் சாட்டோ, துணைச் செயலா்
கிறிஸ்துதாஸ் மற்றும் எட்வின்ஜோஸ் உள்ளிட்ட பங்குப் பேரவை உறுப்பினா்கள், அருள்சகோதரிகள், பங்குமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.