மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மாநகராட்சிக்கு ரூ. 19.68 லட்சம் வரி பாக்கி வணிக வளாக புதைவடிகால் இணைப்பு துண்டிப்பு
திருச்சி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக ரூ. 19.68 லட்சம் வரி செலுத்தாததால், அலுவலா்கள் வணிக வளாகத்தின் புதைவடிகால் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம் ( மண்டலம்-1) சத்திரம் பகுதி, வாணப்பட்டறை தெருவில் தனியாா் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்கான வரியினங்கள் கடந்த இரு ஆண்டுகளாக செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சியினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். நேரடியாகவும் சென்று வரி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா். என்றாலும் வரி முழுமையாக செலுத்தப்படாமல் ரூ. 19, 68,267 பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வணிக வளாகத்துக்கான புதைவடிகால் இணைப்பை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை துண்டித்துள்ளனா். இதுபோல நீண்டகாலமாக வரியினங்களை செலுத்தாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனா்.