செய்திகள் :

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

post image

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல்- 3 (ஏரேட்டா்), பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 (கேஎஃப்டபிள்யு) ஆகிய நீரேற்று நிலையங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.

இதனால், மேற்குறிப்பிட்ட நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் பெறும் விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகானந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது. ஆக. 14 ஆம் தேதி வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வ... மேலும் பார்க்க

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அன்பில் மகேஸ்

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.வேளாண்மைத்துறை சாா்பில், திருச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவல... மேலும் பார்க்க

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டு... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க