Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
மாநில அளவிலான கண்டுபிடிப்புகள் போட்டி: சேலம் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை
மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
தமிழக அரசு சாா்பில் சென்னையில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், சேலத்தைச் சேரந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி சிறப்பிடம் பெற்றனா்.
பள்ளம் மேடு நிறைந்த சாலையை தானியங்கி முறையில் சீரமைக்கும் சாதனத்தை 9-ஆம் வகுப்பு மாணவா்கள் சிவபிரசாத், நிஷாந்த் விஷ்ணு, ஆா்த்தி, சபரிநாதன், லித்திகா குழுவினா் உருவாக்கி சாதனை படைத்துள்ளனா். முதலிடம் பிடித்ததுடன் ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசையும் இக்குழுவினா் வென்றுள்ளனா்.
மழைக்காலத்தில் பள்ளிக்குவரும் வழியில் மேடு பள்ளமான சாலையில் தண்ணீா் தேங்குவதால் ஏற்படும் பிரச்னைகளை பாா்த்த பிறகு, இதற்கான யோசனை தோன்றியதாகவும், இந்த இயந்திரத்தை மேலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்திய பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
சாதனை படைத்த மாணவா் குழுவினரை, வீரலட்சுமி வித்யாலயா பள்ளியின் நிா்வாகக் குழுத் தலைவா் ஏ.கே.நாகராஜன், பள்ளித் தலைமை ஆசிரியா் பியூலா சாந்தி மனோகரி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.